பேட்டி
Now Reading
குஷ்பு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் விஷால்
0

குஷ்பு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் விஷால்

by editor sigappunadaJanuary 2, 2017 1:10 pm

நடிகர் சங்கத்துக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையேயான சச்சரவு இந்த ஆண்டும் இனிதே துவங்கியிருக்கிறது. தற்போது இருக்கும் தாணு தலைமையிலான தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. கலைப்புலி S.தாணு, T.சிவா, கதிரேசன், P.L.தேனப்பன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையும் சூழலில், தற்போது புதிய தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை அறிவித்திருக்கிறது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்கவுள்ள இந்த தேர்தலுக்கு, நடிகர் சங்க செயலாளர் விஷால் தனது அணி சார்பாக நடிகை குஷ்புவை பரிந்துரை செய்திருக்கிறார். தனக்கு குஷ்பு மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து குஷ்பு, விஷால் அணி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். என்னால் தலைமை பொறுப்பு வகிக்கமுடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். மற்ற பொறுப்புகளுக்கும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் அனல் பறக்கும். விஷால், தயாரிப்பாளர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினராகவும் இல்லாத நிலையில் அவரால் தேர்தலில் போட்டியிடவும், வாக்கு செலுத்தவும் முடியாது என்பதால் குஷ்பூவை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு அவரது அணி மூலம் போட்டியிட வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response