மாவட்டம்
Now Reading
குப்வாரா பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு
0

குப்வாரா பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

by editor sigappunadaJanuary 29, 2017 11:02 am

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மச்சால் பிரிவில் ரோந்து சென்றுக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 5 பேர் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி புதையுண்டனர். பல அடி உயரத்திற்கு பனி படிவுகள் குவிந்து கிடப்பதால் ராணுவ வீரர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இருப்பினும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில்  குப்வாராவில் பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. குரேஷ் பகுதியில் ராணுவ முகாம்கள் மீது பனி பாறைகள் சரிந்து விழுந்ததில் 14 வீரர்கள் உயிரிழந்தனர். குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பனிச்சரிவு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குப்வாரா, பண்டிபோரா, பாராமுல்லா, கண்டேர்பல், குல்காம் மற்றும் புடகம் உள்ளிட்ட மாவட்டங்களில் பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் துணை ஆணையர் கூறியுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response