மாவட்டம்
Now Reading
குடிநீர் பிரச்னை தீர்க்க வழி என்ன?
0

குடிநீர் பிரச்னை தீர்க்க வழி என்ன?

by editor sigappunadaMarch 30, 2017 11:24 am

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் மார்ச் 29ஆம் தேதி புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகச் செயலாளர் பனீந்தர்ரெட்டி, மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 28ஆம் தேதி செவ்வாய்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் அதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலாளர், அதிகாரிகளை அழைத்து மார்ச் 29ஆம் தேதி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். குடிநீர் பிரச்னையால் மக்கள் கடும் அவதிப்படுவதால் அரசின் சார்பில் என்னென்ன கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது, ஆழ்துளை கிணறுகள் எத்தனை இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன என்பது பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response