மாவட்டம்
Now Reading
குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை – அதிர்ச்சி
0

குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை – அதிர்ச்சி

by editor sigappunadaJanuary 30, 2017 10:54 am

காவிரியாறு தமிழகத்தில் நுழையும் எல்லையான ஒகேனக்கல் பகுதியில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் பல மடங்கு குறைவான தண்ணீர் வரத்து இருப்பதால், குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் ஜீவாதார நதிகளில் மிக முக்கியமானது காவிரியாறு. கர்நாடக மாநிலம், குடகு மலையில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டின் ஒகேனக்கல்லில் விழுந்து மேட்டூரில் சங்கமித்து, உணவுக் களஞ்சிமான தஞ்சைத் தரணியைச் செழிப்பாக்கி கடலில் கலக்கும் ஜீவநதி.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை பருவமழை பொய்த்ததும், கர்நாடக மாநிலத்திலிருந்து சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததும் தமிழ்நாட்டில் பெரும் வறட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வெறும் 60 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. தீயணைப்புத் துறையினர் இந்த அளவை உறுதிப்படுத்துகின்றனர்.
ஆனால், வருவாய்த் துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, 150 கன அடிக்கும் குறைவான தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
முரண்பட்ட தகவல்கள் இருந்தபோதும் தண்ணீரின் அளவு கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிகவே குறைவு என்பதை மட்டும் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒப்புக்கொள்கின்றனர். அதேநேரத்தில் மேட்டூர் அணைக்கு 68 கன அடியாக இருப்பது அதிகாரப்பூர்வ தகவல்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் கோடை காலத்தின்போது 400 கன அடி தண்ணீர் வந்தபோதே குடிநீர்ச் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் உருவானது. ஆனால், அப்போது மிகக் குறைந்த அளவான 55 கன அடி தண்ணீர் வந்தாலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு தண்ணீர் எடுப்பது பாதிக்காது என்று குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இப்போது கோடை காலத்துக்கு முன்பே- ஜனவரி இறுதியிலேயே தண்ணீர் வரத்து 60 கன அடியைத் தொட்டிருப்பதால், குடிநீருக்கான அச்சம் அதிகரித்திருக்கிறது. தண்ணீர் வரத்து குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாகமரை பரிசல் துறையின் அவலம்:
ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் செல்லும் ஆற்றுப் போக்கில் நாகமரை பரிசல் துறை முக்கிய இடமாகும். இங்கிருந்து காவிரியாற்றைக் கடக்க பரிசல் பயணம் மேற்கொண்டு சேலம் மாவட்டத்தின் பண்ணவாடிக்குச் செல்லலாம்.
ஏராளமான பொதுமக்கள் இந்தப் பரிசல் பயணத்தை நம்பியிருந்தனர்.
ஆனால், தண்ணீர் வரத்து மிகக் குறைந்துவிட்டதால், இப் பகுதியில் சாதாரண ஓடையைப் போன்ற அளவில்தான் தண்ணீர் செல்கிறது என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response