மாவட்டம்
Now Reading
காவிரி, பாலாறு பிரச்சினைகளில் மத்திய அரசின் நிலை என்ன? – பி.ஆர்.பாண்டியன்
0

காவிரி, பாலாறு பிரச்சினைகளில் மத்திய அரசின் நிலை என்ன? – பி.ஆர்.பாண்டியன்

by editor sigappunadaJanuary 31, 2017 3:01 pm

,

காவிரி, பாலாறு, முல்லை பெரி யாறு பிரச்சினைகளில் மத்திய அரசின் நிலை குறித்து வரும் பட்ஜெட்டில் தெளிவுபடுத்த வேண் டும் என தமிழக அனைத்து விவ சாயிகள் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள் ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது:

நாட்டில் பருவமழை குறைந்து, பல மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளன. தமிழகம் வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்துள்ளது. வார்தா புயல் தாக்கு தலாலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், மத்திய பட்ஜெட்டில் வறட்சி மற்றும் வார்தா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்டுள்ள நிவாரணத் தொகையை வழங்குவது குறித்து அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசு கோரியுள்ள புதிய நீர்ப் பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். பாஜக தேர்தல் அறிக்கையில் ஏற்றுக்கொண்ட தன் அடிப்படையில், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை முழுவதையும் ஏற்க வேண்டும்.

நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்பு பெருந்திட்டம் அறி விக்க வேண்டும். காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சினைகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பின்பற்றி மத்திய அரசின் கொள்கை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response