மாவட்டம்
Now Reading
கார்டுகளுக்கு சேவை கட்டணம் கிடையாது- பெட்ரோலியத் துறை அறிவிப்பு
0

கார்டுகளுக்கு சேவை கட்டணம் கிடையாது- பெட்ரோலியத் துறை அறிவிப்பு

by editor sigappunadaJanuary 9, 2017 9:00 pm

1483967785

பெட்ரோல் பங்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு சேவை கட்டணம் கட்ட வேண்டாம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்குப் பிறகு மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல், இன்சூரன்ஸ் பிரீமியத்துக்கு டெபிட், கிரெடிட் கார்டு, இ-வேலட், பைல் வேலட் மூலம் பணம் செலுத்தினால் 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மாறாக பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார்டுகளுக்கு அனைத்து வங்கிகளும் 1% வரி விதித்துள்ளன. இதனால் இழப்பு ஏற்படுவதாகக் கூறி இன்று முதல் கார்டுகளுக்கு பெட்ரோல் வழங்க முடியாது என்று பெட்ரோல் உரிமையாளர் சங்கம் நேற்று திடீரென அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பால் லாரி உள்ளிட்ட அனைத்து வாகன ஒட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. எனவே, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 1 சதவீத வரி விதிக்கும் முடிவை வங்கிகள் நிறுத்தி வைத்ததையடுத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ஜன-13 ஆம் தேதி வரை பெட்ரோல் டீசல் வழங்கப்படும் என்று பெட்ரோல் உரிமையாளர் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில், பெட்ரோல் பங்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு பரிவர்த்தனைக் கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ’’பெட்ரோல் பங்குகளில் இனி கார்டுகளுக்கு சேவை கட்டணமான 1% வரி வசூலிக்கப்படாது. அதுபோன்று ஜனவரி13-ஆம் தேதிக்கு பிறகும் மக்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பங்க்குகளில் பயன்படுத்தலாம். வங்கிகள் மற்றும் பெட்ரோல் முகவர்களுக்கு இடையேயான பிரச்சனைகள் விரைவில் தீர்வுக்கு வரும்’’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, இனிமேல் தொடர்ந்து தடையின்றி கார்டுகள் மூலம் பெட்ரோல் பங்க்குகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response