க்ரைம்
Now Reading
காப்பக பெண்ணை கர்ப்பமாக்கிய நிர்வாகி!
0

காப்பக பெண்ணை கர்ப்பமாக்கிய நிர்வாகி!

by Sub EditorMay 22, 2017 12:34 pm

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நடத்தி வருபவர் முருகசாமி. இவர் நடத்திவரும் பள்ளிகளில் 200-க்கும் மேற்பட்ட காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளை பள்ளியின் நிர்வாகியான முருகசாமி பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்வதாக அந்தப் பள்ளியின் முன்னாள் ஊழியர் அருண்காந்தி என்பவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி அருகே உள்ள கோதம்பாளையத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் உள்ள மாணவிகளிடம் கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்தப் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை பள்ளி நிர்வாகி முருகசாமி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த அந்த சிறுமியை பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திவந்த போலீசார், பள்ளித் தாளாளர் முருகசாமி, பள்ளியின் நிர்வாகிகளான சித்ராதேவி, பிரமிளா, பாபு, ரேவதி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இராணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். நம்பி அடைக்கலம் வந்தவர்களை நாசமாக்கினால் அவர்கள் எங்குதான் போவார்கள்?

– அமான்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response