மாவட்டம்
Now Reading
காதலியை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்து வைத்த காதலன்!
0

காதலியை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்து வைத்த காதலன்!

by editor sigappunadaFebruary 5, 2017 11:20 am

மேற்கு வங்கத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் போலீசார் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு வீட்டிற்குள் புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் உடலை கைப்பற்றினர். மேலும் அந்த வீட்டில் இருந்த உதயன் தாஷ் எனபவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட உதயன் தாஸ் குறித்து போலீசார் கூறும்போது, கொலை செய்யப்பட்ட இளம்பென் அஹங்ஷா அவருடைய தோழி என்றும் அவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாகவும் கூறினர்.

மேலும் அஹங்ஷாவுக்கும், உதயன் தாஸ்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த டிசம்பர் மாதம் அஹங்ஷாவை கழுத்தை நெறித்து கொலை செய்து அவனுடைய வீட்டிலேயே குழி தோண்டி புதைத்துள்ளார். தனது மகளிடம் இருந்து எந்த அழைப்புகளும் வராததால் சந்தேகமடைந்த அவரின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அஹங்ஷா மற்றும் உதயன் ஆகிய இருவருக்கும் சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டதாகவும், தொடக்கத்தில் நட்பாக ஆரம்பித்து பின்னர் அவர்களின் நட்பு காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அஹங்ஷா மற்றும் உதயன் தாஸ் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. சிறிது காலத்திற்கு பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அஹங்ஷாவின் கழுத்தை நெறித்து கொலை செய்து, அவரின் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே குழி தோண்டி புதைத்துள்ளார்.

இந்த சம்பவமானது கடந்த டிசம்பர் மாதம் நடந்துள்ளது, ஆனால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் இன்று காலை தான் கண்டுபித்து, உதயன் தாஸையும் கைது செய்தனர். மேலும் குற்றவாளியாகிய உதயன் தாஸை போலீசா கைது செய்து விசாரித்து வருகின்றனர்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response