மாவட்டம்
Now Reading
காட்பாடி டெல் ஆலை பிரச்சினை – தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
0

காட்பாடி டெல் ஆலை பிரச்சினை – தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

by editor sigappunadaJanuary 7, 2017 8:01 pm

காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் டெல் வெடி மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. நிதி நிலை பற்றாக்குறை ஏற்பட்டு ஆட்குறைப்பு மற்றும் உற்பத்தி மந்தம் போன்ற காரணங்களால் டெல் தொழிற்சாலை நலிவடைந்து விட்டதாக தி.மு.க.வினர் ஏற்கனவே குற்றம் சாட்டினர்.

ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 6 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் காலதாமதம் செய்யப்படுவதாகவும், இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி வருவதாகவும் தி.மு.க.வினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

டெல் ஆலையின் பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. தலைமை கழக முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response