அரசியல்
Now Reading
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது!
0

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது!

by Sub EditorJanuary 6, 2017 2:27 pm

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவி ஏற்ற பிறகு முதல் செயற்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்த செயற்குழு கூட்டத்தில் பணப் பிரச்சினை பற்றி விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கட்சி செயல்பாடு பற்றி பிரச்சினைகளை கிளப்பப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க. நடத்திய போராட்டத்தில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நேரில் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார். இதை உறவை புதுப்பிக்கும் முயற்சியாக எடுத்துக் கொண்டாலும் புகைச்சலும் இருக்கத்தான் செய்கிறது.

விரைவில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் இந்த புரியாத நிலைப்பாடு தொண்டர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எனவே காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு பற்றியும் நாளைய கூட்டத்தில் விவாதிக்க திட்டமிட்டு இருப்பதாக நிர்வாகி ஒருவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response