அரசியல்
Now Reading
காங்கிரஸ் கூட்டணி தொடருமா?மு.க.ஸ்டாலின் பதில்!
0

காங்கிரஸ் கூட்டணி தொடருமா?மு.க.ஸ்டாலின் பதில்!

by editor sigappunadaFebruary 28, 2017 11:35 am

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு செய்ததன்படி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதையடுத்து, இறுதியாக ஸ்டாலின் பேசுகையில், ஏற்கனவே தெரிவித்ததைப்போல் இப்போதும் அப்படியே செய்து கொள்ளலாம். ஆனால், இதில் தங்களை சரியாக மதிக்கவில்லை என்று கூட்டணிக்கட்சி தரப்பில் புகார் கூறப்பட்டது. எனவே, இந்தமுறை அதுபோல் எதுவும் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், தற்போதைக்கு கூட்டணி தொடரும் என்று அறிவித்து விடுவோம் என்று கூறியுள்ளார். திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன.

அப்போது, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் பேசுகையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவே நடக்காது. 6 மாதத்திற்குள்ளாக ஆர்.கே.நகரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் நாம் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response