மாவட்டம்
Now Reading
காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் தோல்வி: முலாயம் சிங் புலம்பல்
0

காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் தோல்வி: முலாயம் சிங் புலம்பல்

by editor sigappunadaMarch 13, 2017 10:10 am

உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி தோல்வி அடைந்ததற்கு காங்கிரசுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முலாயம் சிங், “காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால், சமாஜ்வாதி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். காங்கிரசை யாரும் விரும்பவில்லை. கூட்டணியை நான் வெளிப்படையாகவே எதிர்த்தேன். கூட்டணி பலத்தால் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்பு தகர்ந்துள்ளது.

கூட்டணியை ஆதரித்ததாகவோ, ஆதரவாக பிரசாரம் செய்ததாகவோ கூறினால் அது பொய். காங்கிரஸ் இல்லாமலேயே 2012-ஆம் ஆண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தோம். தற்போது ஏற்பட்டுள்ள தோல்விக்கு கூட்டணி மீதான அதிருப்தியே காரணம். டிவி விவாதத்தில், ஒருவர் பேசும்போது, நான் சமாஜ்வாதிக்கு தான் எப்போதும் ஓட்டுப்போடுவேன்.

ஆனால், முலாயம் அவமதிக்கப்பட்டதால், இந்த முறை ஓட்டுப்போடவில்லை என்றார். இது போல் நிறைய பேர் கூறியுள்ளனர்.பா.ஜ.,வுக்கு கிடைத்த வெற்றி பெரியது. அவர்களுக்கு பெரிய நாளாக அமைந்துள்ளது. தோல்வியை ஏற்றுக்கொண்டு மறு ஆய்வு செய்தால், கட்சி மீண்டும் தோல்வியிலிருந்து புத்துயிர் பெறும்” என்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response