மாவட்டம்
Now Reading
கவுன்சிலர் படுகொலைக்கு காரணம் என்ன?
0

கவுன்சிலர் படுகொலைக்கு காரணம் என்ன?

by editor sigappunadaJanuary 4, 2017 12:49 pm

20170104100140_alangulam-councilor-murder-case-police-search-6-people_secvpf

ஆலங்குலம் கவுன்சிலர் மோகன்ராஜ் நேற்று முன் தினம் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் மோகன்ராஜ் கொலையில் முன்னாள் அமைச்சர் ஆலடிஅருணாவின் கொலை வழக்கில் விடுதலையான மருதபுரத்தை சேர்ந்த வேல்துரைக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் 1992-ம் ஆண்டு காளத்திமடம் அருகே சிவலார்குளத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மோகன்ராஜூக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொலையான செல்வராஜின் மகன் பழனி, அவரது உறவினர் நித்தியகுமார், வேல்துரை உள்ளிட்ட 6 பேர் மோகன்ராஜ் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதில் பழனி, நித்யகுமார் ஆகியோர் மீது நல்லூரில் வைத்திலிங்கம் என்பவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. தற்போது பழனி, நித்யகுமார், வேல்துரை உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
100%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response