மாவட்டம்
Now Reading
கவுன்சிலர் சீட்டை பறித்ததற்காக நடந்த கொலை!
0

கவுன்சிலர் சீட்டை பறித்ததற்காக நடந்த கொலை!

by Sub EditorMay 3, 2017 2:45 pm

திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் . புரட்சி பாரதம் கட்சியின் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளரான இவர், வக்கீலாகவும் பணியாற்றினார். இவர் கடந்த 18ம் தேதி காலை, அருகில் உள்ள ஏரிக்கரைக்கு நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லிங்கமூர்த்தி உட்பட ஐந்துபேரை கைது செய்தனர். ஏன் கொலை செய்தார் என்பது பற்றி லிங்கமூர்த்தி கொடுத்த வாக்குமூலம்: “ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட எனது பெயர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நான், அதிகத்தூரில் உள்ள கட்சியினருக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டி வந்தேன்.

15 ஆண்டுகளாக ஒன்றிய கவுன்சிலராக இருந்த வக்கீல் வேலாயுதத்துக்கு சால்வை அணிவித்து ஆதரவு கேட்டேன். ஆனால் வேலாயுதம், அதிமுக சார்பில் அவர் போட்டியிட தலைமை மூலம் நெருக்கடி கொடுத்தார். இதனால் எனது பெயரை நீக்கிவிட்டு, வேலாயுதத்துக்கு அதிமுக தலைமை சீட் வழங்கியது. திடீரென உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுகவில் வழங்கிய கவுன்சிலர் சீட் பறிபோன கோபத்தில் இருந்தேன். அப்போது மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் துவங்கியது. இதனால் வேலாயுதத்தைக் கொலை செய்தால் சீட் எனக்கு கிடைக்கும் என்று வேலாயுதத்தைக் கொலை செய்ய முடிவு செய்தேன். 18ம் தேதி காலை நானும் உறவினர் சத்தியமூர்த்தி, நண்பர் யுவராஜ் உட்பட 5 பேர், ஏரியில் நடை பயிற்சியில் சென்ற வேலாயுதத்தை கத்தியால் குத்திக்கொலை செய்தோம்” என்று கூறியுள்ளான்.

– சுதன்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response