அரசியல்
Now Reading
கவர்னர் என்ன சொன்னார்? சசிகலா அறிக்கை
0

கவர்னர் என்ன சொன்னார்? சசிகலா அறிக்கை

by editor sigappunadaFebruary 10, 2017 10:48 am

 ச

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கச் செல்வதற்கு முன்பாக மெரீனாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் ஆட்சி அமைப்பதற்கு, உரிமை கோருவதற்காக கவர்னர் மாளிகைக்கு சசிகலா புறப்பட்டுச் சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினார். அப்போது, கவர்னரிடம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை வழங்கினார்.

அவருடன் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார்,அன்பழகன் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் சென்றனர். சுமார் 3௦ நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. கவர்னருடனான சந்திப்பு முடிந்த பின்னர், சசிகலா அங்கிருந்து நேராக போயஸ் கார்டனுக்குச் சென்றார். அங்கு, சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள், திவாகர் மற்றும் பிற உறவினர்கள் இருந்தார்கள். அவர்களிடம் சசிகலா, கவர்னர் சந்திப்பு குறித்து கூறுகையில், அக்கா நினைவிடத்துக்குச் சென்று வணங்கிய பின்னர் கவர்னரை சந்தித்தால் நல்ல பதில் வரும் என்று முதலில், நினைவிடத்துக்குச் சென்ற பின்னர் கவர்னர் மாளிகைக்குச் சென்றேன். அங்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் நல்லவிதமாக வரவேற்பு கொடுத்தார். அதையடுத்து, நமக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை கவர்னரிடம் கொடுத்து, நாளை( இன்று) பதவியேற்பு விழா வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் இதுகுறித்து, கலந்தாலோசனை செய்த பின்னர் தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறியதாக திவாகரனிடம் தெரிவித்தார்.

அதையடுத்து, இரவு 1௦ மணி வரை எதிர்பார்த்தும் கவர்னரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இருப்பினும், தொடர்ந்து சசிகலா தரப்பினர் கவர்னரிடம் இருந்து அழைப்பு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response