அரசியல்
Now Reading
கவர்னரை திடீரென்று சந்தித்த மத்திய அமைச்சர் -அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
0

கவர்னரை திடீரென்று சந்தித்த மத்திய அமைச்சர் -அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு

by editor sigappunadaJanuary 24, 2017 2:36 pm

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை இன்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென சந்தித்துப் பேசினார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டம் நேற்று கொண்டுவந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதனிடையே, சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. சென்னையில் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். பல இடங்களில் ஆட்டோக்கள் எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இந்த அசாதாரண நிலையைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக ஆளுநரிடம் சட்டம்-ஒழுங்கு குறித்து அறிக்கை கேட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response