மாவட்டம்
Now Reading
கர்நாடகத்தில் ‘கம்பளா’ போராட்டம் தீவிரம் – முழு அடைப்புக்கும் அழைப்பு
0

கர்நாடகத்தில் ‘கம்பளா’ போராட்டம் தீவிரம் – முழு அடைப்புக்கும் அழைப்பு

by editor sigappunadaJanuary 29, 2017 11:42 am

 

தென் கர்நாடகத்தில் அமைந்து உள்ள கடற்கரையோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் பாரம்பரியமிக்க ‘கம்பளா’ விளையாட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் போட்டியின் போது எருமை மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, கடந்த 2014-ம் ஆண்டில் ‘கம்பளா’ போட்டிக்கு தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ‘கம்பளா’ விளையாட்டு கமிட்டி வழக்கு தொடர்ந்து உள்ளது. அந்த வழக்கு 30-ந் தேதி(நாளை) விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் பீட்டா அமைப்பு எதிர்மனுதாரராக உள்ளது.

‘கம்பளா’ போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் நேற்று முன்தினம் மங்களூரு டவுன் ஹம்பன் கட்டா சர்க்கிளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று மங்களூரு அருகே உள்ள மூடபித்ரியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு வந்த பல்வேறு அமைப்பினர் ‘கம்பளா’ போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

200 ஜோடி எருமை மாடுகளை அலங்கரித்து மூடபித்ரியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ‘கம்பளா’ போட்டி நடக்கும் இடமான ஒன்டிகட்டே பகுதி வரை அழைத்து சென்றனர். இதற்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

இதற்கிடையே ‘கம்பளா’ போட்டியை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கம்பளா போட்டியை நடத்த சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வாட்டாள் பக்‌ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒத்த கருத்துடைய பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response