அரசியல்
Now Reading
கருணாநிதியுடன் ஸ்டாலின், அழகிரி சந்திப்பு
0

கருணாநிதியுடன் ஸ்டாலின், அழகிரி சந்திப்பு

by editor sigappunadaJanuary 6, 2017 2:52 pm

 

mk1

திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி, மு.க. ஸ்டாலின் என இருவரும் ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்துப் பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வகித்து வந்த இளைஞரணி செயலர் பதவியை வெள்ளகோவில் சாமிநாதனுக்கு விட்டுக்கொடுத்தார். ஸ்டாலின் செயல் தலைவரான நிலையில் அழகிரி மீண்டும் திமுகவில் எந்த நேரத்திலும் சேர்க்கப்படலாம் என்கிற பேச்சு தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்தநிலையில் தான் திமுக தலைவர் கருணாநிதியை மு.க. அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து கருணாநிதியை அடுத்த சில நிமிடங்களில் ஸ்டாலினும் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஒரே நாளில் திமுக தலைவர் கருணாநிதியை, மு.க.அழகிரி, மு.க. ஸ்டாலின் என இருவரும் அடுத்தடுத்து சந்தித்துப் பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response