பேட்டி
Now Reading
கபாலி டீம் கொடுக்கும் ரஜினியின் பிறந்தநாள் ட்ரீட்!
0

கபாலி டீம் கொடுக்கும் ரஜினியின் பிறந்தநாள் ட்ரீட்!

by editor sigappunadaDecember 11, 2016 1:15 pm

டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் ரஜினியின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு காரணமாக தனது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடவேண்டாம் என ரஜினி தன் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் கபாலி படக்குழு இந்தமுறை ரசிகர்களுக்கு வித்தியாசமான முறையில் பிறந்த நாள் டிரீட் கொடுக்க உள்ளது. அதாவது கபாலி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதமாக இணையத்தில் பதிவேற்றப்படவுள்ளதாக அந்த படத்தின் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினியின் பிறந்த நாளான நாளை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணுவின் யூ டியூப் கணக்கிலிருந்து பதிவேற்றப்படும் கபாலியின் நீக்கப்பட்ட காட்சிகளை பார்க்க அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response