மாவட்டம்
Now Reading
கந்துவட்டிக்கு துணைபோகும் தட்டார்மடம் போலீசார்!
0

கந்துவட்டிக்கு துணைபோகும் தட்டார்மடம் போலீசார்!

by Sub EditorFebruary 4, 2017 4:38 pm

சில போலீசார் செய்யும் தவறால் காவல்துறை முழுவதுக்கும் களங்கம் வந்துவிடுகிறது. தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் போலீசே தவறு செய்வதால் பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள தட்டார்மடம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பொன்னுசாமி. இவர் வசூல் மன்னன் என்று அப்பகுதி மக்களிடையே பெயர் பெற்றவர். வட்டிக்கு விடுவது சட்டப்படி குற்றம். ஆனால் சின்ன இசக்கி, பாலகிருஷ்ணன் என்ற இரண்டு பேர், அப்பாவி மக்களிடம் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்கின்றனர். கொஞ்சம் தாமதமானாலும் அடாவடியாக அடித்துப் பிடுங்குகின்றனர்.

இதை தட்டிக் கேட்டிவேண்டிய இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி, கந்துவட்டிக்காரர்களிடம் கமிஷனை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த இருவரும் பொன்னுசாமிக்கு மிக நெருக்கமாக இருப்பதால், போலீஸ் ஸ்டேஷனில் மூன்று பேரும் அமர்ந்து கொண்டு பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். பணம் தராமல் இழுத்தடிப்பவர்களிடம், இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி மிரட்டி பணத்தை தரச்சொல்கிறாராம். அப்பாவி பொதுமக்கள், அவர் செய்யும் அராஜகத்தால் கடும் வேதனையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிலரால் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள கறையை, தமிழக காவல்துறை, தக்க நட்வடிக்கையின் மூலம் போக்க வேண்டும்.

– ஜெரொ

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response