சினிமா
Now Reading
கதை ரகசியம் முக்கியமா? பிரிண்ட் முடியுமா?
0

கதை ரகசியம் முக்கியமா? பிரிண்ட் முடியுமா?

by Sub EditorFebruary 23, 2017 2:36 pm

அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘விவேகம்’. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சற்றே பருமனான உடலுடன் வலம் வந்த அஜித் தற்போது, ‘விவேகம்’ படத்துக்காக உடலை மெருகேற்றியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இதனால் பாலிவுட் திரையுலகில் அஜித்துக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘விவேகம்’ படத்தின் ஹிந்தி வெர்ஷன் 8 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறதாம். இப்படத்தின் கதை பற்றி ரகசியம் காத்து வருகிறதாம் படக்குழு. அதெல்லாம் சரிதான், படத்தின் பிரிண்டை கசியாமல் ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கு அதுதான் மிக முக்கியம்.

– அமான்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response