உலகம்
Now Reading
கடும் பனிப்பொழிவு; லண்டனில் விமான சேவைகள் ரத்து!!
0

கடும் பனிப்பொழிவு; லண்டனில் விமான சேவைகள் ரத்து!!

by Sub EditorJanuary 12, 2017 11:43 pm

கடந்த சில தினங்களாக லண்டன் நகர் முழுவதும் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. பனிப் பொழிவுடன் பலத்த காற்றும் வீசுகிறது.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில சேவைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெனீவா, மான்செஸ்டர், பிளாங்பர்ட் ஆகிய நரங்களுக்கு செல்லும் முக்கிய விமானங்களில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்று திட்டமிடப்பட்ட 1,350 விமானங்களின் சேவைகளில் 80 சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஹீத்ரோ விமான நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில், “மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளின் திட்டமிடலில் மாற்றங்கள் செய்யப்படலாம். பயணிகள் தங்களது பயண விவரங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஹீத்ரோ விமான நிலையம் மட்டுமன்றி ஐரோப்பாவின் ஏனைய விமான நிலையங்களும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response