அரசியல்
Now Reading
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு உத்தரவு
0

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு உத்தரவு

by editor sigappunadaApril 3, 2017 12:22 pm

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டதையடுத்து, அவருக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது மாநில பாதுகாப்பு படைப்பிரிவு பாதுகாப்பு வழங்கி வரும்நிலையில், அவரது ஆதரவு எம்.பி-க்கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார், சுந்தரம், சத்தியபாமா உள்பட 12 பேர் டெல்லியில் மார்ச் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியபோது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பு கேட்டு கோரிக்கை கடிதத்தை வழங்கினார்கள். அதில், ‘அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. இதை பொறுக்கமுடியாத சசிகலா அணியினர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.

புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி பதவியேற்ற தினத்தன்று இரவு சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டு முன் கல்வீசப்பட்டது. அதைப்போல பெரியகுளத்தில் உள்ள அவரது வீடு, போடியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்களும் தாக்கப்பட்டன. கடந்த மார்ச் 15ஆம் தேதி அவர் தனது சொந்தத் தொகுதியில் பயணம் செய்தபோதும் தாக்குதல் நடந்தது.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறியதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைந்தபிறகு, அந்த முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். இப்படி மிரட்டலும், தாக்குதலும் தொடர்வதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு ஏப்ரல் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 11 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பன்னீர்செல்வத்துக்குப் பாதுகாப்பு வழங்குவார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response