அரசியல்
Now Reading
ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழு அமைப்பு
0

ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழு அமைப்பு

by editor sigappunadaApril 21, 2017 1:34 pm

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி சார்பில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், வீரமணி, தங்கமணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகளாக பிரிந்தன.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தமிழக அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் கட்சியிலிருந்து டிடிவி தினகரனை ஒதுக்கிவைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவை ஓபிஎஸ் அணி வரவேற்றது. இதனால் அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த தினகரனும் ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன் எனத் தெரிவித்தார்.

விரைவில் இணைப்பு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை), வழக்குகளில் சிக்கியுள்ள டிடிவி தினகரனை வெளியேற்ற சசிகலா குடும்பத்தினர் நாடகம் நடத்தி வருவதாகவும், அதற்காக அமைச்சர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் என்றும் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

இதனால் இரு அணிகள் இணைப்பில் பின்னடைவு ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. இத்தகைய சூழலில்தான் இன்று காலை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையின் அடிப்படையில் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் டிடிவி.தினகரனை அவரது இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்திருக்கிறார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response