பேட்டி
Now Reading
ஓபிஎஸ் அணியால் மட்டுமே நல்லாட்சியைத் தர முடியும் – முன்னாள் டிஜிபி திலகவதி
0

ஓபிஎஸ் அணியால் மட்டுமே நல்லாட்சியைத் தர முடியும் – முன்னாள் டிஜிபி திலகவதி

by editor sigappunadaMarch 14, 2017 11:23 am

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் டிஜிபி ஜி.திலகவதி ஆதரவு தெரிவித்திருந்தார். நேற்று ஓபிஎஸ் இல்லத்துக்கு அவர் வந்திருந்தார். அப்போது தாம் ஏன் ஓ.பன்னீர்செல்வம் அணியை ஆதரிக்கிறேன் என்பது குறித்து விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:

நான் காவல்துறையில் 35 ஆண்டுகளாகப் பணியாற்றி நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றுள்ளேன். மக்கள் துயரங்களைப் போக்கியிருக்கிறேன். ஓய்வுபெற்ற பிறகு சமூக சேவையில் ஈடுபட ஆர்வமாக இருந்தேன். ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துதான் சேவையில் ஈடுபட வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். அதனால் எந்த கட்சியில் சேரலாம் என்ற குழப்பத்தில் இருந்தேன்.

இந்த நிலையில் ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்ததும் அதன்பின்னர் அவர் எடுத்த துணிச்சலான முடிவும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக சிறப்பாக அவர் பணியாற்றினார். அப்போதே அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அபிமானமும் ஏற்பட்டது. எனவே, அவரது தலைமையை ஏற்று வந்துள்ளேன். அவர் நிச்சயம் நாட்டை ஆள்வார். மக்களுக்கு நல்லது நடக்கும். ஓ.பன்னீர்செல்வம் அணியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியைத் தர முடியும் என்றார் திலகவதி.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response