மாவட்டம்
Now Reading
ஓட்டுக்குப் பணம் : விழிப்பு உணர்வு கலை நிகழ்ச்சி!
0

ஓட்டுக்குப் பணம் : விழிப்பு உணர்வு கலை நிகழ்ச்சி!

by editor sigappunadaMarch 19, 2017 1:12 pm

தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இந்திய நாட்டு குடிமகனின் உரிமை. ஆனால், வாக்காளர்களுக்கு வாக்களிக்க லஞ்சம் கொடுப்பது இந்திய நாட்டின் எழுதப்படாத சட்டமாக உள்ளது இன்று வரையில். வாக்காளர்களுக்குப் போட்டி போட்டுக்கொண்டு பணமாகவும் பரிசாகவும் கொடுத்து மக்களை கவர்ந்து, உரிமை என்று சொல்லக்கூடிய வாக்குகளை ஆளும்கட்சியினர் மட்டுமன்றி எதிர்க்கட்சியினரும் விலைக்கு வாங்குகிறார்கள்.

தேர்தல் நேரங்களில் மட்டும் கடுமையான விழிப்புடன் இருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தல் முடிந்த பிறகு செத்துபோன பாம்பாக மாறிவிடும். இடைத்தேர்தல் என்றால் சொல்லவே தேவையில்லை. தொகுதியில் பண மழை பொழிவது அனைவருக்கும் தெரியும். ஆனால், தேர்தல் ஆணையத்தால் இதுவரை என்ன செய்ய முடிந்தது? ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முக்கிய மூன்று வேட்பாளர்களின் கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுப்பார்கள்.

இந்நிலையில், ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு என்பதை பொது மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வு குழுவினரும், கல்லூரி மாணவிகளும் கும்மிப்பாட்டு மூலமாக விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

கும்மிப்பாட்டில் உள்ள சில வரிகள் இதோ…

ஐந்நூறு ரூபாய் தாரேன்,கூட பவுன் கொஞ்சம் தாரேன்,

ஒப்புக்கிட்டு ஓட்டு போடு, எனக்கு நீயும் தாயே.

ஐந்நூறு ரூபாயும் வேண்டாம், அந்த கொஞ்சம் பவுனும் வேண்டாம்.

ஏறி தூர்வாரி குடி தண்ணீர் வந்தால் போதும்.

இட்லி, பொங்கல், வடையும், பிரியாணியும் தாரேன்,

தின்னுபுட்டு எனக்கு நீ ஓட்டு போடு தாயே.

இட்லி, பொங்கல், வடையும், பிரியாணியும் வேண்டாம்.

விவசாயம் நிலம் சிரிச்சா வயத்து பிழப்பு பார்ப்போம்’

என்ற கும்மி பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. மாணவர்களின் விழிப்பு உணர்வுகளை அரசியல்வாதிகள் அழிப்பு உணர்வு செய்கிறார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response