க்ரைம்
Now Reading
ஓட்டலை அபகரித்த எஸ்.பி.யும், ஏடி.எஸ்.பியும்!
0

ஓட்டலை அபகரித்த எஸ்.பி.யும், ஏடி.எஸ்.பியும்!

by Sub EditorApril 18, 2017 12:58 pm

கோவில் நகரான திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் தேரடித் தெருவில் மிகவும் பிரபலமான ஹோட்டல் அபிராமி ஹோட்டல். இந்த ஓட்டலை நடத்தி வந்தவர் பால்ராஜ். இந்த ஓட்டலில் கேஷியராக வேலை செய்து வந்தவர் வீரராகவபெருமாள். சில ஆண்டுகளுக்கு முன்பு பால்ராஜும், அவரது மனைவி தனலட்சுமியும் கூட்டாக சேர்ந்து ஓட்டல் தொழில் அபிவிருத்திக்காக நகரில் சில வியாபார பிரமுகர்களிடம் ரூபாய் ஒரு கோடி கடன் வாங்கி இருந்தார்களாம்.

இது குறித்து பால்ராஜும், தனலட்சுமியும் நம்மிடம், “நாங்கள் வாங்கிய கடனுக்கு அசலும் வட்டியும் சேர்த்து அவ்வப்போது கட்டி வந்தோம். வாங்கிய கடனைவிட வட்டி அதிகமாக போகவே கடன் கொடுத்தவர்கள் எங்களை அடிக்கடி டார்ச்சர் கொடுத்து ஒரு கட்டத்தில் எங்களை கடத்திச் சென்றனர். நாங்களும் பிரச்னைகளை சந்தித்து மீண்டு வந்தோம். போலீஸில் புகார் கொடுத்தால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அப்போது இரவு நேரத்தில் எங்களது ஓட்டலில் ஓசி சோறு தின்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டும், சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் அக்கா பேரனுமான ரங்கராஜன் அடிக்கடி வந்துபோவார். அப்போது அவரிடம் எங்கள் பிரச்சனை குறித்து கூறினோம். அடிக்கடி என்னையும் என் கணவரையும் இது குறித்து விசாரிக்க அவரது ஆபிசுக்கு கூப்பிடுவார். புகாரும் கொடுத்தோம். இதை தெரிந்து கொண்ட எங்களது ஓட்டல் கேஷியர் வீரராகவபெருமாள் தனி ரூட் எடுத்து, எஸ்.பி. பொன்னிக்கு பணம் கொடுத்து அவரது ஆதரவோடு எங்களது ஓட்டலை அபகரித்துக் கொண்டார். இந்த ஓட்டல் எங்களுக்குத் தான் சொந்தம் என. கமர்ஷியல் டாக்ஸ், டின் நம்பர், நகராட்சி அனுமதி சான்று, என எல்லாவற்றையும் ஆதாரங்களோடு காண்பித்ததோடு மட்டுமல்லாமல் இடத்தின் உரிமையாளரிடம் நாங்கள் போட்ட ஒப்பந்தப் பத்திரத்தையும் காண்பித்து திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து எல்லாவற்றையும் விளக்க, அவரும் பிரச்னையின் தன்மையை அறிந்து ஓட்டலை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். ஆனால் உத்தவிட்ட பிறகும் கூட இந்நாள்வரை ஓட்டலை பூட்டவில்லை. காரணம் போலீஸ் சூப்பிரண்ட்டென்ட் பொன்னி மற்றும் கூடுதல் சூப்பிரண்டென்ட் ரங்கராஜன் ஆகியோர் உதவியால், வீரராகவபெருமாள் தொடர்ந்து ஓட்டலை நடத்தி வருகிறார். எங்கள் ஓட்டல் எங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரமே அதில்தான் இருக்கிறது.” என்று கண்ணீருடன் கூறினர்.

ஓட்டலில் விற்பனையாகும் சாப்பாடு மற்றும் டிபன் ஐட்டங்கள் விற்ற வகையில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வருகிறது. இந்த பணத்தை எஸ்.பி.பொன்னியும் கூடுதல் சூப்பிரண்ட் ரங்கராஜனும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து வீரராகவனை டம்மியாக வைத்துக் கொண்டு ஓட்டலை நடத்தி இலாபம் பார்த்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்.பி.பொன்னியிடம் கேட்டபோது, ‘வருவாய் கோட்டாட்சியர் உத்தரவுக்காக ஓட்டலை பூட்ட முடியாது. வீரராகவபெருமாள் நீதிமன்றம் சென்றுள்ளார். எங்களால் எதுவும் செய்யமுடியாது” எனக் கூறினார்.

குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கும் எஸ்.பி.பொன்னி கூடுதல் எஸ்.பி.ராங்கராஜன் ஆகியோர் மீது உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து பொன்னியையும், ஏடி.எஸ்.பி.ரங்கராஜனையும் கைது செய்து பணி நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று பால்ராஜ் -தனலட்சுமி தம்பதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து இந்து முன்னணி மாவட்டத் தலைவரும், வழக்கறிஞருமான சங்கர் கூறுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, வழிப்பறி, மணல் திருட்டு என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு காரணம் எஸ்.பி.பொன்னியும், ஏடி.எஸ்.பி. ரங்கராஜனும்தான். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற, நில அபகரிப்பு, கட்டிடங்கள் அபகரிப்பு குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு விசாரணை நடத்தவேண்டும் .அப்போது பல உண்மைகள் வெளிவரும்.” என்று கூறினார். இதே பொன்னி கடந்த 2014 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கையால் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு எப்படி விருது கிடைத்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

– ஈஸ்வரபாண்டி

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response