சினிமா
Now Reading
ஒரே நேரத்தில் இரண்டு படம் ஒப்பந்தம்
0

ஒரே நேரத்தில் இரண்டு படம் ஒப்பந்தம்

by editor sigappunadaJanuary 7, 2017 8:52 pm

‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘அறம்’ படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜிப்ரான்.

கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அறம்’. ‘குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மகளிர் மட்டும்’. சூர்யா தயாரித்துவரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது.

இவ்விரண்டு படங்களுக்குமே இசையமைப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் ” ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘அறம்’ படங்களின் காட்சிகளைப் பார்த்தேன். இரண்டுமே தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்தும் படங்களாக இருக்கும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விரண்டு படங்களுக்குமே ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதை படக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது. இப்படங்களைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இசையமைப்பாளராகவும் ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response