மாவட்டம்
Now Reading
ஒரு குவாரிக்கு ஒரு லட்சம் கேட்கும் முதன்மை பொறியாளர்
0

ஒரு குவாரிக்கு ஒரு லட்சம் கேட்கும் முதன்மை பொறியாளர்

by Sub EditorMay 18, 2017 5:22 pm

திருச்சி மண்டல பொதுப்பணித் துறையின் முதன்மை பொறியாளராக இருப்பவர் பழனிக்குமார். 6 மாதத்திற்கு முன்பு இவரது கட்டுப்பாட்டில் 24 மணல் குவாரிகள் இருந்தன. 3 மாதத்திற்கு முன்னர் அதன் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது .ஒரு நாளைக்கு குவாரிக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு காரணங்களால் பல மணல் குவாரிகள் மூடப்பட்டு திருச்சி மண்டல பொதுப்பணித்துறை மேற்பார்வையில் 8 மணல் குவாரிகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன. இந்தநிலையில் முதன்மை பொறியாளர் ஒரு குவாரிக்கு 1 லட்சம் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்டுருக்கிறாராம். “இந்த பணம் எனக்கு மட்டும் இல்லை. பிஏ வுல ஆரம்பித்து அமைச்சர் ஆபீசு வரை கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறாராம். ஏற்கனவே பல விவகாரத்தில் பொதுப்பணித்துறை சிக்கியிருக்கும் இந்த நேரத்தில் குவாரி கமிஷன் விவகாரம் தற்போது பொதுப்பணித்துறையை கலக்கிக் கொண்டிருக்கிறதாம்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response