விளையாட்டு
Now Reading
ஐ.பி.எல். பதவி: கோலியிடம் மன்னிப்பு!
0

ஐ.பி.எல். பதவி: கோலியிடம் மன்னிப்பு!

by editor sigappunadaMarch 31, 2017 1:13 pm

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்து இந்தியா கோப்பையைக் கைப்பற்றியிருந்தாலும் இன்னும் கடைசி டெஸ்ட் போட்டி பற்றிய கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

‘மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலி இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. ஆனால், இதற்கு அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல். தொடரே காரணம்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயம் காரணமாக ஆடவில்லை எனும்போது இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவிருக்கும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் அவர் ஆடினால் அது அசிங்கமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

இது கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ள நிலையில், தனது கருத்துக்கு இந்திய மக்கள், ரசிகர்கள், இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் குறிப்பாக விராட் கோலியிடம் மன்னிப்பு கோருவதாக பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார். ‘யாரையும் காயப்படுத்துவதோ, விமர்சிப்பதோ அல்லது தரக்குறைவாக பேசுவதோ தனது எண்ணம் இல்லை’ என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், பிரச்னை இதோடு முடியவில்லை. ‘ஹாட்ஜ், குஜராத் லயன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக விரைவில் இணைய உள்ளார். இதை மனதில்கொண்டே அவர் மன்னிப்பு தெரிவித்துள்ளார்’ என சமூக வலைதளங்களில் கோலி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response