விளையாட்டு
Now Reading
ஐபிஎல் ஏலம்: தமிழக வீரர் நடராஜன் ரூ. 3 கோடிக்குத் தேர்வு!
0

ஐபிஎல் ஏலம்: தமிழக வீரர் நடராஜன் ரூ. 3 கோடிக்குத் தேர்வு!

by editor sigappunadaFebruary 20, 2017 12:51 pm

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

10-ஆவது ஐபிஎல் சீசனுக்காக நடைபெறும் இந்த ஏலத்தில் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதிலிருந்து அனைத்து அணிகளும் சேர்ந்து அதிகபட்சம் 76 வீரர்களை வாங்க முடியும். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 27 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். அனைத்து அணிகளும் தலா 22 முதல் 24 வீரர்களை தங்கள் அணியில் வைத்துக் கொள்ளும் திட்டத்தில் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றன. இந்த முறை வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இஷாந்த் சர்மா, இயான் மோர்கன், மிட்செல் ஜான்சன், பட் கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஏஞ்செலோ மேத்யூஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response