அரசியல்
Now Reading
ஏழு திமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்
0

ஏழு திமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்

by editor sigappunadaMarch 17, 2017 10:45 am

 

கடந்த பிப்ரவரி 18 ல் சட்ட மன்றத்தில், அதிமுக அரசின் பெரும்பான்மையை நிருபிக்க கூட்டிய சட்டமன்ற கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.சபாநாயகர் தனபால் நேரடியான வாக்கெடுப்பு மட்டும்தான் நடத்த முடியும் என்று மறுத்ததால் சட்ட சபையை நடத்த விடாமல் திமுக எம்.எல்.ஏ.கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் சபாநாயகரின் இருக்கை மீது சட்ட மன்ற உறுப்பினர்கள் ஏறி அமர்ந்ததால் சட்ட சபையின் மாண்பு போய்விட்டது என்று தனபால் கடுமையான குற்றத்தை திமுக எம்.எல்.ஏ.கள் மீது சுமத்தினார். அதோடு சட்ட சபை சட்டை கிழிந்து சண்டை சபையாக மாறியது.

மீடியாக்களில் இது குறித்து செய்திகள் வெளியானது. ஸ்டாலினும் சட்டை கிழிந்து சட்டசபையில் இருந்து வெளியே வந்தவர் நேராக மெரீனா சென்று உண்ணாவிரதம் இருந்தார்.

பிறகு இந்த சம்பவம் நீதி மன்றம் வரை சென்றது.பிறகு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது.

.இந்த நிலையில் நேற்று பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமானது.பிறகு நேற்று மாலை வரை நடந்த கூட்டத்தொடர் பிறகு வரும் 23 ம், தேதி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று மாலை எட்டு மணியளவில் திமுக எம்.எல்.ஏ.கள் கு.க.செல்வம் ஆயிரம் விளக்கு,எக்மோர் கே.எஸ்.ரவிச்சந்திரன், கன்னியாகுமரி சுரேஷ்ராஜன்,வந்தவாசி அம்பேத்குமார் ,வேலூர் கார்த்திக்கேயன் , செஞ்சி மஸ்தான் , வேப்பனஹளி முருகன் ஆகிய ஏழு பேருக்கும் சட்ட மன்ற உரிமை மீறல் குழு , தாமாக முன் வந்து நோட்டீஸ் (சோகாஸ்) அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் சட்ட சபையின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு உள்ளனர். இதனால் திமுக எம்.எல்.ஏ.கள் ஸ்டாலினிடம் முறையிட்டு உள்ளனர்.

ஸ்டாலின்,சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, இது முறியடிக்கும் திட்டமென்று திமுகவினர் கருதுகின்றனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுகவினர் ஆலோசித்து வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response