க்ரைம்
Now Reading
எஸ்.ஐ என்று கூறி போலீசை அதிர வைத்த கில்லாடி!
0

எஸ்.ஐ என்று கூறி போலீசை அதிர வைத்த கில்லாடி!

by Sub EditorMay 2, 2017 1:18 pm

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சுபா என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காலை போலீஸ் உடையில் வந்த ஒருவர் வரவேற்பறையில் பணியில் இருந்தவர்களிடம், தான் கண்டோன்மென்ட் காவல் உதவி ஆய்வாளர் என்று கூறியுள்ளார்.
பின், ‘விடுதியின் கோப்புகளை எடுத்துக்காட்டுங்கள்’ என மிரட்டியதுடன், 1,000 ரூபாய் பணமும் கேட்டிருக்கிறார். வரவேற்பறையில் இருந்தவர்கள் தங்கள் மேலதி காரிகளிடம்தான் பணம் வாங்க முடியும் என்று கூறியிருக்கின்றனர். உடனே அவர்களுக்கு தகவலும் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து அவரிடம் பேசியபோது சந்தேகம் ஏற்படவே போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த கண்டோன்மென்ட் காவல்துறையினர் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது அவர் தன்னை எஸ். ஐ. என்று கூறி ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது.அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார்.
அவர் பெயர் சுதாகர், அவர் திருச்சி, மண்ணச்ச நல்லூரை சேர்ந்தவராம். திருச்சியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பணத்தாசையால் இப்படி செய்தாராம். நல்லா இருக்குய்யா உங்க டீட்டெய்லு….

– லோகேஷ்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response