அரசியல்
Now Reading
எம்.ஜி.ஆர் அவர்கள் தனிப்பட்டமுறையில் என்னிடம் அன்பும் பாசமும் காட்டியவர் -ஸ்டாலின்
0

எம்.ஜி.ஆர் அவர்கள் தனிப்பட்டமுறையில் என்னிடம் அன்பும் பாசமும் காட்டியவர் -ஸ்டாலின்

by editor sigappunadaJanuary 17, 2017 7:37 pm

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு 17-1-2017இல் நிறைவு பெறுகிறது. தொடக்க நிலையில் திரை வாழ்விலும் பொது வாழ்விலும் தலைவர் கலைஞர் அவர்களுடன் இணைந்து பயணித்தவர். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதும் திரு. எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்குமான ஆழமான நட்பு தொடர்ந்தது. தன்னுடன் இருந்தவர்கள், தலைவர் கலைஞர் அவர்களை கருணாநிதி என்று குறிப்பிட்டபோதெல்லாம் அவர்களைக் கண்டித்து திருத்தியவர் திரு.எம்.ஜி.ஆர். என்பதை மறந்துவிட முடியாது. மறைந்த திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் தனிப்பட்டமுறையில் என்னிடம் அன்பும் பாசமும் காட்டி ஊக்கமூட்டியவர். தி.மு.கழக கொள்கைப் பிரச்சார நாடகத்தில் நான் நடித்தபோது, அதற்கு தலைமை வகித்து, வாழ்த்துரை வழங்கி என்னை உற்சாகப்படுத்தியதை என்னால் மறக்க முடியாது.

அரசியல் நாகரிகமும் பண்பாடும் போற்றும் தலைவர் கலைஞர் அவர்கள், மறைந்த திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடத்தை சீரும் சிறப்புமாக அமைத்தும், தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும், தரமணியில் உள்ள திரைப்பட நகருக்கும் திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்டியதையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். மறைந்த திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவுபெறும் இந்த நேரத்தில் அவரது நினைவைப் போற்றி, எவ்விதப் பலனும் எதிர்பாராமலும் அனுபவிக்காமலும் அவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவைப் போற்றுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response