மாவட்டம்
Now Reading
எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சியின் நிலைமை இன்று மோசமாக உள்ளது -முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன்
0

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சியின் நிலைமை இன்று மோசமாக உள்ளது -முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன்

by editor sigappunadaJanuary 18, 2017 7:25 pm

கோவை மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலரவன், கோவை கணபதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நான் எம்.ஜி.ஆர் 1972-ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்ததில் இருந்து கட்சியில் உள்ளேன். எம்.ஜி.ஆர். மீதான பாசத்தால் அவருக்கு பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் கட்சி பணியாற்றினேன்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் நிலைமை தலைகீழாக போய் விட்டது. இனியும் கட்சியில் பணியாற்ற முடியாது என்பதால் தீபாவை ஆதரிப்பது என நான் முடிவு செய்து விட்டேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்களை காப்பாற்ற தீபாவால் மட்டுமே முடியும். அதனால் தீபாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்து விட்டேன்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கட்சியை காப்பாற்ற ஜெயலலிதாவுடன் இணைந்து போராடினேன். அப்போது எனக்கு மண்டை உடைந்தது. சாகும் நிலைக்கு தள்ளப்பட்டு மீண்டு வந்தேன்.

ஆனால் இன்று யார்- யாரோ கட்சியை நாங்கள் தான் காப்பாற்றினோம் என்று பேசி வருகிறார்கள். பொதுவாக ஒரு கட்சியை ஒரு குடும்பத்தால் காப்பாற்ற முடியாது. தொண்டர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

ஜெயலலிதாவின் வாரிசு தீபா தான், அதனால் தீபா ஆரம்பிக்கும் கட்சியில் நான் இணைவேன். இதுசம்பந்தமாக நான் யாரிடமும் பேசவில்லை. என்னை போல் இன்னும் சிலர் விரைவில் தீபாவுடன் இணைவார்கள். தீபாவுடன் இணைந்ததற்கு விலைபோய் விட்டதாக அ.தி.மு.க. அமைச்சர்கள் கூறி வருகிறார்கள், இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை.

ஜெயலலிதாவால் தான் நான் 2 முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மேயராகவும் பணியாற்றினேன். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சியின் நிலைமை இன்று மோசமாக உள்ளது. இதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன், எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதாவுடான நினைவுகளை பகிர்ந்து பேசினார். அப்போது இடை இடையே அவர் சோகத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response