மாவட்டம்
Now Reading
என்.எல்.சி. இந்தியா நிகர லாபம் ரூ.440 கோடி!
0

என்.எல்.சி. இந்தியா நிகர லாபம் ரூ.440 கோடி!

by editor sigappunadaDecember 11, 2016 4:43 pm

பொதுத்துறையைச் சேர்ந்த என்.எல்.சி. இந்தியா கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.440.12 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.525.82 கோடியாக அதிகரித்திருந்தது. இதே காலாண்டுகளில், மொத்த விற்பனை வருவாய் 19.6 சதவிகிதம் உயர்ந்து, ரூ.1,718.19 கோடியில் இருந்து, ரூ.2,056.67 கோடியாக அதிகரித்துள்ளது.

இதே காலத்தில் அந்நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி 60.21 லட்சம் டன்னில் இருந்து 69.27 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி 496.34 கோடி யூனிட்டில் இருந்து 525.48 கோடி யூனிட்டாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாதங்களில், அந்நிறுவனத்தின் நிகர லாபம், 26.8 சதவிகிதம் குறைந்து, ரூ.1,083.68 கோடியில் இருந்து ரூ.793 கோடியாக சரிவடைந்துள்ளது. இதே காலத்தில், மொத்த விற்பனை வருவாய் ரூ.3,564.09 கோடியில் இருந்து ரூ.3,938.51 கோடியாக அதிகரித்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response