பேட்டி
Now Reading
‘என் உடன் பிறப்புகளே’ என்று கருணாநிதி விரைவில் பேசுவார்: துரைமுருகன்
0

‘என் உடன் பிறப்புகளே’ என்று கருணாநிதி விரைவில் பேசுவார்: துரைமுருகன்

by editor sigappunadaMarch 19, 2017 2:06 pm

சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டம் கந்தன்சாவடியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்கள்.

இந்த அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சமீபத்தில் ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. உறுப்பினர்களை கைது செய்தது இந்த அரசாங்கம்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்ததால் கைது செய்ததாக போலீஸ் கூறுகிறது. சில இடத்தில் கைது செய்தார்கள். சில இடங்களில் கைது செய்யாமல் நீங்களே ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கலைந்து சென்று விடுங்கள் என்று கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டனர். இதுதான் தமிழ்நாடு முழுவதும் நடந்திருக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் நிலையானது அல்ல. சசிகலா ஒரு துணைப் பொதுச் செயலாளரை நியமித்து விட்டு போயிருக்கிறார். அவர் மு.க.ஸ்டாலினை பற்றி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு பற்றி என்ன தெரியும்?

நான் கலைஞரோடு 55 ஆண்டு காலம் வாழ்ந்தவன். கலைஞர் எவ்வளவு பெரிய தலைவர் தன் வாழ்நாள் முழுவதும் இந்த இனத்துக்காகவும், இயக்கத்துக்காகவும் பாடுபட்டவர்.

அந்த மாபெரும் தலைவனுக்கு பராக்கிரமசாலிக்கு இன்றைக்கு கொஞ்சம் உடல்நலம் தளர்ந்திருக்கிறது. கூடிய விரைவில் கலைஞர் பேசுவார். ஒரே வரியாவது என் உடன் பிறப்புகளே என்று சொல்லியே தீருவார்.

அ.தி.மு.க. கட்சி என்பது ஆர்.கே.நகரிலே தொடங்கி அடுத்த தேர்தலோடு புண்ணியாதானம் செய்யப்பட வேண்டும். பிறகு இந்த இனம், இந்த இயக்கம் மு.க.ஸ்டாலினைத்தான் எதிர் பார்க்கிறது. எல்லோரும் அவர்தான் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நல்லவரைத்தான் இந்தநாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு 6 மாதத்திற்குள் நிச்சயமாக பொதுத் தேர்தல் வந்தே தீரும். தளபதி நிச்சயம் ஆட்சிக் கட்டிலில் அமர்வார்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response