ஸ்பெஷல்
Now Reading
எங்களுக்கு கொடுப்பதில்லை- ஓட்டல் ஊழியர்கள் போர்கொடி
0

எங்களுக்கு கொடுப்பதில்லை- ஓட்டல் ஊழியர்கள் போர்கொடி

by editor sigappunadaJanuary 5, 2017 1:24 pm

பெரிய ஹோட்டல்களுக்குச் சென்று நாம் சாப்பிட்ட பிறகு அளிக்கப்படும் பில்லில் சாப்பாட்டுக்கான கட்டணத் துடன் சேர்த்து வாட் வரி, சேவை வரி (service tax), சேவை கட்டணம் (service charge) என்று பல்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு ‘‘ஹோட் டல்களில் சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. விருப் பப்பட்டால் மட்டும் வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டணத்தை கொடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தினர், ‘ இந்த கட்டணம், ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.’ என்று கூறினர்.

ஆனால் ஓட்டல் ஊழியர்கள் இதை மறுக்கின்றனர்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூ லிக்கப்படும் சேவை கட்டணம் ஹோட்டல் ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான ஹோட்டல்களில் அந்த கட்டணத்தை பகிர்ந்து அளிப்பதில்லை என்று ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்த விஷயம் ஓட்டல் நிர்வாகங்களுக்கு சிக்கலை  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response