அரசியல்
Now Reading
ஊழலுக்கு எதிரான செயல் தலைவரின் உருப்படியான செயல்!
0

ஊழலுக்கு எதிரான செயல் தலைவரின் உருப்படியான செயல்!

by Sub EditorMay 18, 2017 5:30 pm

திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசின் செயலற்ற தன்மையை பொறுப்பான எதிர்கட்சித் தலைவராக கடுமையாக விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவந்தது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கும் விதமாக ஊழலுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசின் இமாலய ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டி அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அணியும் போட்டி போட்டுக்கொண்டு அரசு கஜானாவைக் காலி செய்திருப்பது, அடுத்தடுத்து வரும் ஊழல் செய்திகள் மூலம் தெரிய வருவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு இதுவரை டிஜிபி அந்தஸ்தில் இயக்குநர் நியமிக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டிய விஜிலென்ஸ் கமிஷனர் பதவி இன்னமும் காலியாகவே வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனி அதிகாரி நியமிக்காத காரணத்தால் தமிழக விஜிலென்ஸ் கமிஷன் செயலிழந்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க அதிமுக அரசுக்கு மனம் வரவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.  ஊழலுக்கு எதிரான அமைப்புகள் அத்தனையும் இயங்க விடாமல் திட்டமிட்டு தடுக்கப்பட்டு இருப்பதன் மூலம், மிகப்பெரிய அளவில் ஊழல் பெருகி, தமிழக மக்களின் நலன் மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.

உள்துறைச் செயலாளரை, மாநில விஜிலென்ஸ் ஆணையராக கூடுதல் பொறுப்பில் நியமித்துள்ள இடைக்கால நடவடிக்கையால் மாநில விஜிலென்ஸ் கமிஷனுக்கு உள்ள சுயாதீனத்தன்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான இணையத்தில் கூட வெளியிடாமல் பாதுகாக்கப்படும் மர்மம், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள தவறான நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது என்று கடும் குற்றச்சாட்டை அதிமுக அரசின் மீது வைத்திருக்கிறார்.

தாங்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, மாநில விஜிலென்ஸ் கமிஷனுக்கு சுதந்திரமாக இயங்கக் கூடிய விஜிலென்ஸ் கமிஷனரை பணியமர்த்தவும், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனராக டிஜிபி அந்தஸ்தில் ஒருவரை பணியமர்த்தும்படி தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்த திமுக அதற்குரிய தண்டனையை கடந்த சில தேர்தலில் அனுபவித்து விட்டது. அதன்பிறகு திமுகவின் போக்கி
லும் மாற்றத்தைக் காணமுடிந்தது. இந்தநிலையில் அதிமுக அரசின் ஊழலுக்கு எதிராக துணிச்சலாக குரல்கொடுத்து பொதுமக்களிடம் சபாஷ் வாங்கியுள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலினின் கோரிக்கையை ஆளுநர் பரீசிலித்து பரிந்துரைத்தால், வரும்காலங்களில் ஊழல் குறைய வாய்ப்பிருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கத்திற்கான அறிகுறி என்றே தெரிகிறது.

– ஜெகன்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response