மாவட்டம்
Now Reading
உ.பி. முதல்வரான சாமியார் -யோகி ஆதித்யாநாத்
0

உ.பி. முதல்வரான சாமியார் -யோகி ஆதித்யாநாத்

by editor sigappunadaMarch 19, 2017 10:42 am

உத்தரப்பிரதேச முதலமைச்சராக கோரக்பூர் தொகுதியில் 5 முறை எம்.பி.,யாக இருந்த யோகி ஆதித்யாநாத் (44) இன்று மாலை தேர்வு செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 312 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன் கூட்டணிக் கட்சிகள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்தமாக பா.ஜனதா கூட்டணி 325 இடங்களைக் கைப்பற்றியது.

அங்கு புதிய முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், மனோஜ் சின்கா, மகேஷ் சர்மா மற்றும் உத்தரப்பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் கேசவ்பிரசாத் மவுரியா, லக்னோ மேயர் தினேஷ் சர்மா ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். புதிய முதலமைச்சரை ஒருமனதாக தேர்வு செய்ய பா.ஜனதா மேலிடம் முடிவுசெய்தது. ஆனால் கடும் போட்டி நிலவுவதால் முதலமைச்சரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, பா.ஜனதா எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் முதலமைச்சரை தேர்வு செய்ய முடிவுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, லக்னோவில் இன்று மாலை 4 மணிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோரக்பூர் தொகுதியில் 5 முறை எம்.பி.,யாக இருந்த யோகி ஆதித்யாநாத் (44) தேர்வு செய்யப்பட்டார்.

புதிய முதலமைச்சரை தேர்வுசெய்யும் பொறுப்பை மாநிலத் தலைவர் மவுரியாவிடம் அமித் ஷா ஒப்படைத்திருந்தார். அவர் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பேச்சு நடத்தி அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார். பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் கருத்து அடிப்படையிலேயே முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தின் புதிய முதலமைச்சர் தேர்வு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுடனும் பா.ஜனதா தலைமை ஆலோசனை நடத்தியது.

அதையடுத்து, மாநில பா.ஜனதா தலைவர் கேசவ்பிரசாத் மவுரியா லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் லக்னோவில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வராக யோகி ஆதித்யாநாத் தேர்வு செய்யப்பட்டார். புதிய அமைச்சர்கள் பட்டியலும் தயாராகியுள்ளது’ என்றார்.

இன்றைய கூட்டத்தில் புதிய முதலமைச்சராக யோகி ஆதித்யாநாத் தேர்வு செய்யப்பட்டதும், அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரும் கடிதத்துடன் அமைச்சர்கள் பட்டியலையும் கொடுக்கவுள்ளார். புதிய மந்திரி சபை பதவியேற்பு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று தெரியவருகிறது.

உ.பி.முதல்வராக யோகி ஆதித்யாநாத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, உ.பி.யில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response