அரசியல்
Now Reading
உ.பி. சட்டப் பேரவைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது!
0

உ.பி. சட்டப் பேரவைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது!

by Sub EditorJanuary 17, 2017 12:41 pm

உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 73 தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன. 17) தொடங்குகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், அடுத்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதல் கட்டமாக, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 73 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுவதன் மூலம், தேர்தல் நடைமுறைப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
அதேநாளில், முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 73 தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கலும் தொடங்குகிறது.

வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி தேதி இந்த மாதம் 24-ஆம் தேதி எனவும், அவற்றைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி இந்த மாதம் 27-ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response