உலகம்
Now Reading
உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி; 40 ஆயிரம் பேர் படுகாயம் – ஐ.நா. தகவல்
0

உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி; 40 ஆயிரம் பேர் படுகாயம் – ஐ.நா. தகவல்

by Sub EditorJanuary 17, 2017 12:50 pm

ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

தலைநகர் கனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தனி அரசு நடத்தி வருகின்றனர். எனவே அதிபர் மன்சூர் ஹாதி ஏடனை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு சவுதி ஆதரவு கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளன.

இதனால் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படை ஆதரவு பெற்ற ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. 21 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டு போரில் இதுவரை 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் மற்றும் 40 ஆயிரம் பேர்  படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தகவலை ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு பற்றாக்குறையும் நிலவுகிறது. சுமார் 70 லட்சம் பேர் அடுத்தவேளை உணவு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response