உலகம்
Now Reading
உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் பில்கேட்ஸ்!
0

உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் பில்கேட்ஸ்!

by Sub EditorJanuary 25, 2017 6:11 pm

ஆக்ஸ்போம் இன்டர்நேஷனல் என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர்  பில்கேட்ஸ், அடுத்த 25 ஆண்டுகளில் தனது 86 வயதாகும் போது, அவர் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் ஆக உள்ளார் என தெரிவித்துள்ளது. 2009 ம் ஆண்டு முதல் பில்கேட்சின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 11 சதவீதம் அதிகரித்து வருகிறது.

2006ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து பில்கேட்ஸ் விலகிய போது அவரது சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர். 2016 ம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது அவரது தனிப்பட்ட அறக்கட்டளையின் வழியாக சேர்ந்த சொத்தாகும். உலகின் மற்ற செல்வந்தர்கள், இவரின் சொத்து மதிப்பில் பாதி அளவே கொண்டுள்ளனர். போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு பட்டியலின்படி, பில்கேட்சின் சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக உள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் (trillionaire) ஆக உள்ளதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response