விளையாட்டு
Now Reading
உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாகி வரும் அகமதாபாத் ஸ்டேடியம்
0

உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாகி வரும் அகமதாபாத் ஸ்டேடியம்

by editor sigappunadaJanuary 17, 2017 8:05 pm

அகமதாபாத் மாநிலத்தில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று உருவாகி வருகிறது. 1.1 லட்சம் பார்வையாளர்களுக்கான இருக்கை அளவு கொண்டுள்ளதாக இந்த ஸ்டேடியத்தை வடிவமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5௦ ரூம்கள் மற்றும் ஒலிம்பிக் ஸ்விம்மிங் பூல் அளவிற்கு பெரிய ஸ்விம்மிங் பூல் ஒன்றினை கொண்டதாக இந்த ஸ்டேடியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3000 கார்கள் மற்றும் 10,000 இருசக்கர வாகனங்களுக்கான பார்கிங் வசதியுடன் தயாராகி வருகிறது என குஜராத் கிரிக்கெட் அசோஸியேஷன் துணைத்தலைவர் பரிமல் நத்வாணி தெரிவித்தார்.

இதுவரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் தான் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் என்ற பெருமையை தக்க வைத்திருந்தது. ஒரு லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்த அந்த ஸ்டேடியத்தைவிட அதிகமான இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது இந்த அகமதாபாத் ஸ்டேடியம்.

இந்தியாவில் உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாததற்கு காரணம், இங்கு பெரிய அளவிலான விளையாட்டு மைதானங்கள் இல்லாததே. அகமதாபாத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஸ்டேடியம் தயாராகும் பட்சத்தில், பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள உலகிலுள்ள பல நாடுகள் இந்தியாவுக்கு வருகை தரும்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response