க்ரைம்
Now Reading
உயரதிகாரிகளுக்கு சப்ளையாகும் காப்பக பெண்கள்!
0

உயரதிகாரிகளுக்கு சப்ளையாகும் காப்பக பெண்கள்!

by Sub EditorApril 18, 2017 12:50 pm

கோவை கணபதி நகர் அருகேயுள்ள சங்கனூர் சாலையில் மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் அரசு மகளிர் காப்பகம் உள்ளது. இங்கு போலீசாரால் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் இளம் பெண்கள், விபசார வழக்குகளில் மீட்கப்படும் பெண்கள் ஆகியோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு கடந்த எட்டாம் தேதி நிலவரப்படி ஒன்பது பேர் தங்கியிருந்தனர். அங்கு வார்டனாக இருப்பவர் தீபா. அன்று இரவு அவர்களில் ஐந்து பெண்கள் வார்டன் தீபாவை சரமாரியாக தாக்கிவிட்டனராம்.
அங்கிருந்த சில ஆயிரம் பணத்தையும் எடுத்துச் சென்றார்களாம்.

இதுகுறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்தான் அதிர்ச்சி தந்தது. தப்பிய 5 பெண்களும் விபசார வழக்குகளில் மீட்கப்பட்டவர்கள். அவர்கள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்களாம். வார்டன் அந்தப் பெண்களை காவல்துறை அதிகாரிகளுக்கு உடன்படச் சொல்லி தொந்தரவு செய்திருக்கிறார். நாளுக்கு நாள் தொந்தரவு அதிகரிக்கவே, ஆத்திரத்தில் தீபாவை கடுமையாக தாக்கிவிட்டு, சில ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பியிருக்கின்றனர்.
காவல்துறையில் இருக்கும் ஒருசில தவறான அதிகாரிகளால் மொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இவர்களுக்கு துணைபோகும் இதுபோன்ற வார்டன்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு எடுத்துக்காட்டுதான்.
தமிழ்நாடு முழுக்க இருக்கும் பெண்கள் காப்பகத்தில் விசாரணை நடத்தி சரியாக, முறையாக நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– சு.கிசோர்

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response