Now Reading
உத்தமர் காந்தி விருது வாங்கிய ஆய்வாளருக்கு மெமோ!
0

உத்தமர் காந்தி விருது வாங்கிய ஆய்வாளருக்கு மெமோ!

by Sub EditorMay 2, 2017 1:13 pm

அடையார், சாஸ்த்திரிநகர் மதுவிலக்கு அமல்பிரிவில் வேலைபார்த்து தற்போது கண்ணகிநகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் வேலை பார்த்து வரும் ஆய்வாளர் வேலுவுக்கு கலால் ஏ.டி.சி.செந்தில் முருகன் 3ஏ மெமோ கொடுத்துள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? வேலு உத்தமர் காந்தி விருது வாங்கியவர்.

ஏன் மெமோ? அப்படி என்ன செய்தார்?

வேலு கலால் பிரிவில் இருந்தபோது, வழக்கு என்ற பெயரில் கணக்கு காண்பிப்பதற்காக தன் டிரைவர் உதவியுடன், அந்த டிரைவருக்கு தெரிந்த ஒருவரை, பிடித்து, அவரின் இருசக்கர வாகனத்தின் எண்ணை போட்டு கணக்கு காட்டி விட்டார். அப்போது இருந்த ஏ,டி,சி,யும் அதை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு வந்த ஆய்வாளர் சிவகுமார் விசாரித்தபோது, அது பொய் வழக்கு என்பது தெரியவந்திருக்கிறது. உடனே ஆய்வாளர் சிவகுமார் ஏ,டி,சி, செந்தில்முருகனிடம் கூறியிருக்கிறார். அவரும் இந்த விசயம் தனக்குத் தெரியாதது போல ஆய்வாளர் வேலுவுக்கும், அப்போதிருந்த வினாயகம் என்ற ரைட்டருக்கும் மெமோ கொடுத்து விட்டார். வேலுவுடன் இருந்த ரவிசந்திரன்தான் அந்த வழக்கை ஜோடித்தார். ஆனால் ரவிசந்திரனை விட்டுவிட்டு விநாயகத்திற்கு ஏன் மெமோ கொடுக்கவேண்டும்?
இங்கு வேலைபார்த்து மாற்றலான போலீசார் சிலரிடம் விசாரித்தபோது, “ஏ,டி,சி, தனக்கு வேண்டியவர்களை மட்டும் உடன் வைத்திருக்கிறார். உயரதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு பேரை மீண்டும் அங்கு கொண்டு வர ஏ,டி,சி,. முயற்சி எடுத்து வருகிறார். அவருக்கு உடந்தையாக இருக்கும் வேலு எல்லா தில்லுமுல்லு வேலைகளையும் செய்வதில் கில்லாடி. இப்படிபட்டவரான வேலுவுக்கு உத்தமர் காந்தி விருது கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விருதையே கேவலப்படுத்தி விட்டார்கள்.” என்று கூறுகின்றனர்.

“இந்த ஏ,டி,சி, அவர் நியாயமானவராக இருந்திருந்தால் அந்த பைக்கை காண்பித்து வழக்கை போட்ட சில நாட்களில் கண்டுபிடித்து இருக்கலாம். அதை விட்டு விட்டு இப்போது நடவடிக்கை எடுக்கிறார் என்றால் ஆய்வாளர் வேலுவால் எந்த பயனும் இல்லை என்ற நிலை வந்ததால்தான். இதனை கண்டுகொள்ளாமல் இருந்த ஏ.டி.சி.யும் பதில் சொல்ல வேண்டியவர்தான். திருச்சி சென்று குற்றவாளிகளை பிடிக்கும்போது, திருவான்மியூர் மதுபான பார்களில் விற்பனையாகும் பாண்டிசேரி சரக்கை ஏன் பிடிக்க முடியவில்லை? உளவுப்பிரிவு போலீசும் இவர்களை கண்டுகொள்வது இல்லை. அதனால்தான் இவர்கள் இப்படி ஆட்டம் போடுகிறார்கள்.” என்று கூறுகிறார் ஒரு நேர்மையான காவலர்.

பொதுவாக மதுவிலக்கு அமல்பிரிவில் வேலைபார்க்கும் ஒரு போலீசாருக்கு சம்பளம் தவிர மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை மாமூல் வருகிறதாம். இதுதவிர அன்றாடம் செலவிற்கு தனியாக வசூல் செய்து விடுவார்கள்.

மதுவை வளர்க்க போலீசே உதவி செய்தால் மதுவை எப்படி ஒழிக்க முடியும்? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
ஆய்வாளருக்கு மெமோ விசயம் தெரிந்து ஏ,டி,சி,ரைட்டரை செல்போனில் தொடர்புகொண்டு, “ என்ன என்னை மிரட்டி பார்க்கிறீர்களா?” என்று சண்டை போட்டுள்ளார். வேலு வாய்திறந்தால் அவரால் வருமானம் ஈட்டியவர்கள் முகமும் வெளியே தெரிந்துவிடும். ஏ,டி,சி,மீதும், ஆய்வாளர் வேலு மீதும் சென்னை மாநகர ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?

– வி.ராஜ்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response