அரசியல்
Now Reading
உங்க அரசியலே வேண்டாம் – டாடா காட்டிய எஸ் .எம்.கிருஷ்ணா
0

உங்க அரசியலே வேண்டாம் – டாடா காட்டிய எஸ் .எம்.கிருஷ்ணா

by editor sigappunadaJanuary 29, 2017 11:23 am

கர்நாடக முன்னாள் முதல்வரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் இருந்து ‘திடீர்’ ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வராகவும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பொழுது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவர் நேற்று மாலை திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனது காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் அண்மைக்காலமாக எஸ்.எம். கிருஷ்ணா ஓரம் கட்டப்பட்டு வந்ததால் அவர் தீவிர அரசியலில் இறங்காமல் கடும் அதிருப்தியில் இருந்தார். அதனால்தான் அவர் ராஜினாமா செய்திருப்பதாகவும், இனி அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக திகழ்ந்து வந்த எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் 1992-94 வரையில் துணை முதல்வராகவும், 1999-2004 மற்றும் 2004-2008 வரையில் மாநில முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டில் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியுறவுத் துறை மந்திரியாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா பணியாற்றியுள்ளார். மேலும், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையிலும் இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response