உலகம்
Now Reading
ஈராக் மொசூல் சிறை அருகே 500 பேர் கொன்று புதைக்கப்பட்ட ‘பிணக்குழி’ கண்டுபிடிப்பு
0

ஈராக் மொசூல் சிறை அருகே 500 பேர் கொன்று புதைக்கப்பட்ட ‘பிணக்குழி’ கண்டுபிடிப்பு

by editor sigappunadaMarch 12, 2017 11:44 am

ஈராக்கின் மிகப் பெரிய 2-வது நகரமான மொசூல் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டது. அதை அமெரிக்க கூட்டு படையின் உதவியுடன் ஈராக் ராணுவம் சமீபத்தில் கைப்பற்றியது.

மொசூல் அருகே படோஸ் என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அதன் அருகே ஒரே இடத்தில் பலர் புதைக்கப்பட்ட மிகப் பெரிய பிணக்குழி கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் 500 பேர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். 2014-ம் ஆண்டு மொசூல் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அப்போது படோஸ் சிறையில் 1500 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரையும் லாரிகளில் ஏற்றிய தீவிரவாதிகள் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலை பள்ளத்தாக்கு பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷியா பிரிவினரை மட்டும் தனியாக பிரித்து அவர்களை ஓடவிட்டும், கைகளை கட்டி தலையிலும், முதுகிலும் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஒரே குழியில் போட்டு புதைக்கப்பட்டனர் என்று ஷியா பிரிவினரின் ஹ ‌ஷத் கல்-ஷாபி படை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இத்தகவலை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பியவர்களிடம் இருந்து தெரியவந்ததாக கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response