சினிமா
Now Reading
இளையராஜா விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்: எஸ்.பி.பி. வேண்டுகோள்
0

இளையராஜா விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்: எஸ்.பி.பி. வேண்டுகோள்

by editor sigappunadaMarch 21, 2017 12:20 pm

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், தமக்கும் எழுந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என ஊடகங்களுக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனுமதியின்றி தமது பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என இசையமைப்பாளர் இளையராஜா, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அவரது மகன் எஸ்.பி.பி.சரண், பாடகி சித்ரா உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அவ்வாறு மீறி பாடினால், அபராத தொகை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இசைக்கச்சேரி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இளையராஜாவுக்கும், தமக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த விவகாரம் துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தை நண்பர்களும், இசைப்பிரியர்களும் குறிப்பாக ஊடகத்தினர் பெரிதுப்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது இசைக்கச்சேரியும் நடைபெற்று வருகிறது. வாழ்வும் செல்கிறது என குறிப்பிட்டுள்ளார். கடவுளின் படைப்பில் அனைத்தும் சிறந்தவையாகவும், சமமாக உள்ளன என்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response