மாவட்டம்
Now Reading
இளைஞர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு சினிமா பிரபலங்களின் ஆதரவு
0

இளைஞர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு சினிமா பிரபலங்களின் ஆதரவு

by editor sigappunadaJanuary 19, 2017 10:05 am

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் தலைமை ஏதுமின்றி போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களின் தொடர் ஒத்துழைப்பால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு கமல், ரஜினி, விஜய், லாரன்ஸ், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, விஷால், தனுஷ், ஜி.வி.பிரகாஷ் உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரை உலகம் சார்பில் ஆதரவு தெரிவிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் இயக்குனர்கள் கவுதமன், அமீர், நடிகர்கள் ஆர்யா, ஆரி, இசை அமைப்பாளர்கள் யுவன்சங்கர்ராஜா, ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் பங்கேற்றனர். சேலத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் நடிகர், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டார். நடிகர் லாரன்ஸ்  உணவு பொருட்கள் வழங்கி ஆதரவு தெரிவித்து உதவுகிறார்.

இப்படியாக தமிழ் சினிமா நடிகர்களின் ஆதரவு  அதிகரித்து வருகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response